மாவட்ட செய்திகள் ஜூன் 04,2023 | 15:55 IST
புதுக்கோட்டையில் குண்டும் குழியுமான ரோடுகளை மாற்றி தார் ரோடு போடும் பணி நடக்கிறது. ரோடுகளை தரமானதாக போடுவதில்லை, அடி பைப்பை அகற்றாமல் தார் ரோடு போடுவது என தினம் ஒரு நிகழ்வு நடக்கிறது. இது போன்ற செய்திகள் படத்துடன் வெளிவந்து கொண்டு இருந்தாலும் அதிகாரிகள் அதுபற்றி கவலைப்படுவதில்லை. புதுக்கோட்டை நகரப் பகுதியில் உள்ள சாந்தநாதசுவாமி தெருவில் சாந்தாரம்மன் கோயில் முன்பு புதிய தார் சாலை போடப்பட்டது. கோயில் அருகே கார் மற்றும் ஒரு டுவீலர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ரோடு போட்டவர்கள் வாகனத்தை அகற்றாமல் வாகனம் நின்ற இடத்தை விட்டு விட்டு மற்ற பகுதிகளில் ரோடு போட்டு விட்டு சென்று விட்டனர். மாவட்ட நிர்வாகம் ரோடு போடும் பணிகளை கண்காணித்து விடுபட்ட இடத்தில் ரோடு போட உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வாசகர் கருத்து