சிறப்பு தொகுப்புகள் ஜூன் 04,2023 | 16:40 IST
கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்துக்குள்ளாகி 275 பேர் இறந்தனர். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பலர் இதில் பயணம் செய்தனர். விபத்து தகவல் அறிந்ததும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஒடிசாவுக்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகள் முன் குவிந்துள்ளனர். இன்னொரு பக்கம் தண்டவாளத்தை சரிசெய்யும் பணி காரணமாக, ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் தொழில் மற்றும் வேலை விஷயமாக இரு மாநிலத்துக்கும் இடையே தினமும் பயணம் செய்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு, மேற்கு வங்கத்துக்கு பாலசோர் வழியாக ரயில் போக்குவரத்து சீராகும் வரை ஒடிசாவில் இருந்து கொல்கத்தாவுக்கு கட்டணமில்லா பஸ்கள் இயக்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். பூரி, புவனேஸ்வர், கட்டாக்கில் இருந்து தினமும் 50 இலவச பஸ்கள் இயக்கப்படும் என்றார்.
வாசகர் கருத்து