மாவட்ட செய்திகள் ஜூன் 04,2023 | 16:35 IST
திருச்சி மாவட்டம் சமயபுரம் இருங்களூரில் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 2023 ம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா டாக்டர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசின் முதன்மை செயலாளர் டாக்டர். மணிவாசன் 151 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் துணைத்தலைவர் நிரஞ்சன், திருச்சி வளாக இயக்குனர் டாக்டர் மால்முருகன், இணை இயக்குனர் பாலசுப்ரமணியன், டீன் டாக்டர் ரேவதி மற்றும் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து