மாவட்ட செய்திகள் ஜூன் 04,2023 | 17:56 IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் 3ம் நாள் இரவு ஹனுமந்த வாகன உற்சவ வீதிவுலாவில் வடகலை தென்கலை பிரிவினருக்கிடையே பிரபந்தம் பாடுவதில் பிரச்சனை ஏற்பட்டது. தொடர்ந்து நித்தியபடி நெய்வேத்திய பிரசாத விநியோகத்தில் இருபிரிவினருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சாமி மண்டகபடியின் போது சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற மோதலால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் முகம் சுளித்தனர் இரு தரப்பினருமே வேத பாராயணம் முழங்க நீதிமன்றமானது அறிவுறுத்தி தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் தென்கலை பிரிவினர் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்வரை வேத பாராயணம் பாடாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து