மாவட்ட செய்திகள் ஜூன் 04,2023 | 19:53 IST
நேஷனல் ஸ்பேஸ் சொசைட்டியால் நடத்தப்படும் 41 வது சர்வதேச விண்வெளி மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் கோவை காந்திபுரம் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியிலிருந்து 4 மாணவ,மாணவிகளும் ஈரோடு ஸ்ரீசைதன்யா பள்ளியிலிருந்து 5 பேரும் பங்கேற்றனர். இவர்கள் விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தி,சிறுகோள் சுரங்கம் என்ற தலைப்பில் காட்சிப்படுத்துதல் மற்றும் விளக்கவுரை மேற்கொண்டனர்.. மாநாடு முடிந்து கோவை திரும்பிய மாணவ,மாணவிகளுக்கு பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாசகர் கருத்து