மாவட்ட செய்திகள் ஜூன் 04,2023 | 20:11 IST
நாகப்பட்டினம் நெய்தல் நகர் அருகே தனியார் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இதில் சுனாமியில் பெற்றோரை இழந்த குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி, கல்வி பயின்று வருகின்றனர். 20 குழந்தைகளுக்கு ஒரு பெண் காப்பாளர் பணி அமர்த்தப்பட்டுள்ளார். 20 குழந்தைகளுடன் காப்பாளரும் தனியே விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 40 வயதுடைய பெண் காப்பாளர், 12 வயது சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்தார். சிறுவன், மதிலேறி குதித்து தப்பிக்க முயன்றபோது காவலாளியிடம் பிடிபட்டான். காவலாளியிடம் நடந்ததை சொல்லி சிறுவன் அழுதுள்ளான். குழந்தைகள் காப்பக இல்ல நிர்வாகிகள், சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காப்பாளர் மீது போலீஸில் புகார் அளித்தனர். வெளிப்பாளையம் போலீசார் பெண் காப்பாளரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து