மாவட்ட செய்திகள் ஜூன் 04,2023 | 20:34 IST
கோவை வி.எஸ்., செங்கோட்டையா நினைவு உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் சவுத் இணைந்து 'ரவிச்சந்திரன் நினைவு கோப்பைக்கான' கபடி போட்டி செங்கோட்டையா பள்ளி மைதானத்தில் நடந்தது. போட்டியில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சிறந்த 24 அணிகள் முறையில் பங்கேற்றன. லீக் சுற்று போட்டியில் , சென்னை வருமான வரித்துறை, பெங்களூரு துரோனா, பேங்க் ஆப் பரோடா, கோவை பி.ஜே., பிரதர்ஸ், கேரளா ஜே.கே., அகாடமி, ஈரோடு ஏ.எம்.கே.சி., தமிழ்நாடு போலீஸ், ஈச்சனாரி கற்பகம் பல்கலை ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
வாசகர் கருத்து