சிறப்பு தொகுப்புகள் ஜூன் 04,2023 | 22:51 IST
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து 2019ல் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு கடைசியாக முதல்வராக இருந்தவர் மெகபூபா முப்தி. 370வது சிறப்பு பிரிவு ரத்து செய்தபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். ஓராண்டுக்கு பின் விடுவிக்கப்பட்டனர். காலாவதியான தமது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க 2020ல் மெகபூபா விண்ணப்பித்தார். ஆனால், போலீசார் தந்த பாதகமான அறிக்கையை சுட்டிக்காட்டி மெகபூபா மற்றும் அவரது தாயின் பாஸ்போர்ட்கள் முடக்கப்பட்டன. இதை எதிர்த்து ஜம்மு காஷ்மீர் மற்றும், டெல்லி ஐகோர்ட்டில் மெகபூபா முறையிட்டார். 80 வயதான தாயை மெக்காவுக்கு அழைத்து செல்ல வேண்டும்; பாஸ்போர்ட் உடனே வழங்க உத்தரவிட கோரினார். 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிக்கு கடந்த மார்ச்சில் டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், மெகபூபா மற்றும் அவரது தாய் குல்ஷன் ஆராவுக்கு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து