மாவட்ட செய்திகள் ஜூன் 05,2023 | 00:00 IST
திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசலில் செல்வ மாரியம்மன் கோயிலின் 79 ம் ஆண்டு வைகாசி திருவிழா கடந்த 31 ஆம் தேதி முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கியது. கணபதி ஹோமம் , காப்பு கட்டுதல், முத்து எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக பால்குட ஊர்வலம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. 400 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி மற்றும் காவடி எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
வாசகர் கருத்து