மாவட்ட செய்திகள் ஜூன் 05,2023 | 13:06 IST
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கொக்கலாடி அக்கறை கிராமத்தில் முள்ளாட்சி அம்மன் மற்றும் அய்யனார் கோயில் உள்ளது. கோயில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்றது. பணிகள் நிறைவு பெற்று இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது கடந்த 3 ம் தேதி யாக சாலை பூஜை தொடங்கியது, இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து மேளதாளங்கள் முழங்க கடம் புறப்படானது. ஆலயத்தை சுற்றி வலம் வந்து விமானம் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து