மாவட்ட செய்திகள் ஜூன் 05,2023 | 13:12 IST
பூந்தமல்லி குற்றவியல் வக்கீல்கள் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி பூந்தமல்லி அரசு பள்ளியில் நடந்தது. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்தார். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர். 16 அணிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற அணிக்கு ஆள் உயர கோப்பைகளும், பண முடிப்பும் கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்தார்.
வாசகர் கருத்து