மாவட்ட செய்திகள் ஜூன் 05,2023 | 13:10 IST
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் புஷ்பவல்லி வயது 70. இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் கணக்கு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது ஓய்வு நேரத்தில் குளங்களை சுத்தம் செய்தல், ரேசன் கடை, காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பொது இடங்களில் இலவசமாக மஞ்சள் பை வழங்கி பிளாஸ்டிக் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என சமூக பணிகளை செய்கிறார். பொதுமக்களுக்கு வழங்கும் மஞ்சள் பைகளை துணியாக வாங்கி அவற்றை தைத்து இலவசமாக கொடுக்கிறார். பென்ஷன் பணத்திலிருந்து இதற்காக குறிப்பிட்ட தொகையை மாதம்தோறும் செலவழிப்பதாகவும், இதன் மூலம் சமூகத்திற்கு நாம் பயன்படுகிறோம் என்ற மன திருப்தி ஏற்படுவதாக தெரிவிக்கிறார். வார வேலை நாட்களில் வீட்டிற்கும், ஞாயிற்று கிழமை நாட்டுக்காவும் பாடுபட வேண்டும் என்கிறார் புஷ்பவள்ளி. மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் பாராட்டினர்.
வாசகர் கருத்து