மாவட்ட செய்திகள் ஜூன் 05,2023 | 14:25 IST
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அழகாபுரியைச் சேர்ந்தவர் உலகநாதன். இவர் உடல் உறுப்பு தானம் செய்ய மதுரை அரசு இராஜாஜி ஆஸ்பிடலுக்கு சென்றார். ஆஸ்பிடல் நிர்வாகம் மதுரை அரசு மருத்துவக்கல்லூரிக்கு சென்று உடல் உறுப்பு தானம் செய்யுமாறு கூறினர். மருத்துவக்கல்லூரிக்கு சென்று விசாரித்த போது அரசு ஆஸ்பிலுக்கு போகுமாறு கூறினர். உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு ஒரு வாரம் அங்கும் இங்கும் அலைந்த உலகநாதன் கலெக்டர் குறைதீர் கூட்டத்தில் மனு வழங்கினார்.
வாசகர் கருத்து