மாவட்ட செய்திகள் ஜூன் 05,2023 | 15:16 IST
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோயிலில் கஜேந்திர யானைக்கு பெருமாள் மோட்சம் அளித்த புராணத்தை விளக்கும் கஜேந்திர மோட்ச விழா நடைபெற்றது. அகஸ்திய முனிவரின் சாபத்தால் கஜேந்திர யானையாக சாபம் பெற்ற மன்னனும், முனிவரிடம் முதலையாக சாபம் பெற்ற கந்தர்வனுக்கும் ஸ்ரீ விஷ்ணு பெருமாள் சக்கராயுதத்தால் சாப விமோசனம் அருளினார். உற்சவர் சௌமிய நாராயண பெருமாள் சர்வ அலங்காரத்தில் கருட வாகனத்தில் ஆடும் பல்லக்கில் கோயிலிலிருந்து புறப்பாடாகி மணிமுத்தாற்றில் எழுந்தருளினார்.
வாசகர் கருத்து