மாவட்ட செய்திகள் ஜூன் 05,2023 | 15:18 IST
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் கமலதாசன் (44). திருமணமாகாதவர். சென்னை மாநகர மேற்கு மண்டல காவல் கட்டுப்பாட்டு துறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். டுவீலரில் பொன்னேரியிலிருந்து கூடுவாஞ்சேரிக்கு சென்றார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து