சிறப்பு தொகுப்புகள் ஜூன் 05,2023 | 15:20 IST
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் சாராய விற்பனைக்கு பலர் பலியானார்கள். அடுத்த சில நாளில், கடை திறக்கும் முன்பே பாரில் சட்டவிரோதமாக விற்ற மதுவை வாங்கி குடித்து 2 பேர் இறந்தனர். சயனைட் கலந்த மதுவை குடித்ததால் மரணம் என அந்த வழக்கை விசாரிக்காமல், அரசு அப்படியே கைவிட்டு விட்டது. மாவட்டங்களில் பார்கள் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்படுவது இப்போது தெரிய வந்துள்ளது. சிலதினங்களுக்கு முன் மதுபாட்டிலுக்குள் பல்லி கிடந்தது; இப்போது பாசி இருந்ததாக செய்தி வருகிறது. மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த இருவர் மயக்கம் அடைந்துள்ளனர். ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். தெருவுக்கு தெரு மதுக்கடை திறந்து வைத்ததால், மேலும் ஒரு துன்ப நிகழ்வு நேற்று நடந்துவிட்டது. 16 வயது பள்ளி மாணவி ஒருவர் தந்தையின் குடிப்பழக்கத்தால் வேதனை அடைந்து தற்கொலை செய்துள்ளார். இதைப் பற்றி எல்லாம் திமுக அரசுக்கு கவலை இல்லை. மது ஆலைகள் நடத்தும் கட்சிக்காரர்களும் அமைச்சர்களும் சம்பாதிக்க ஏழைகளை பலி கொடுத்து கொண்டிருக்கிறது. சாராய விற்பனையை தடுக்க திறனற்ற திமுக அரசு மதுவால் ஏற்படும் உயிர்பலிகளை என்ன சொல்லி சமாளிக்க போகிறது என அண்ணாமலை கேட்டுள்ளார்.
வாசகர் கருத்து