மாவட்ட செய்திகள் ஜூன் 05,2023 | 16:12 IST
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாதவன் நகரை சேர்ந்தவர் முத்துமாரி. கணவரை இழந்து 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார் இவரது தாய் ராஜேஸ்வரி நகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளராக இருந்து 7 வருடங்களுக்கு முன் இறந்தார். தாய் பணியில் இருந்த போது இறந்ததால் வாரிசு வேலை வழங்குமாறு நகராட்சியில் பலமுறை மனு அளித்தும் பயன் இல்லை. ஆத்திரம் அடைந்த முத்துமாரி காரைக்குடி நகராட்சி முன் பெட்ரோல் கேனுடன் அமர்ந்து போராட்டம் நடத்தினார். காரைக்குடி வடக்கு போலீசார் பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். நகராட்சி வாசல் முன்பு படுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு வந்த திமுக நகர் மன்ற தலைவர் முத்துத்துரை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுப்பேன் என கூறினார். பலமுறை கொடுத்தும் நடவடிக்கை இல்லை என வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் முத்துமாரி. ஆத்திரமடைந்த நகர் மன்ற தலைவர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் மீது வழக்கு பதிவு செய்து உள்ளே போடுங்கள் என கோபமாக சர்ச்சைக்குரிய வார்த்தையில் பேசினார். திமுக நகர்மன்ற தலைவரின் சர்ச்சை பேச்சால் அங்கிருந்த பெண்கள் மற்றும் அதிகாரிகள் முகம் சுளித்தனர்.
வாசகர் கருத்து