மாவட்ட செய்திகள் ஜூன் 05,2023 | 17:13 IST
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர்கள் செல்வ கணேஷ் வயது 30. சேதுபதி வயது 31. இருவரும் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றினர். விருதுநகரில் பணவசூல் செய்து விட்டு டுவீலரில் சிவகாசி திரும்பினர். சிவகாசி ரோட்டில் மீசலூர் விலக்கு அருகே வந்த போது மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியது. இருவரும் பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆமத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து