மாவட்ட செய்திகள் ஜூன் 05,2023 | 18:45 IST
இந்த நவீன காலத்தில் கம்ப்யூட்டர், டெலிவிஷன் திரை முன்பும், மொபைலையும் அதிக நேரம் பார்க்க வேண்டி கால கட்டத்தில் உள்ளோம். இதனால், கண்கள் வழக்கமாக சிமிட்டுகிற திறன் குறைகிறது. இதன் காரணமாக நம் கண்களின் மேலே உள்ள பாதுகாப்பு பகுதி காய்ந்து போக வாய்ப்புள்ளது. கண்கள் சோர்ந்து போகும். இதற்கு தீர்வாக 20-20-20 என்ற ரூல் பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறையும், நமது கண்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையிலிருந்து விலகி 20 அடி துாரத்தில் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகளாவது பார்க்கும் போது நம் கண்களின் சோர்வை தவிர்க்க முடியும். இது தான் அந்த ரூல். திரைகளை தொடர்ச்சியாக பார்க்கும் போது கிட்டப்பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இருட்டில் ஸ்மார்ட் போன் பார்க்கலாமா?, புத்தகம் படிக்கலாமா?, கான்டெக்ட் லென்ஸ் பயன்படுத்தலாமா?, மொபைல் போனிலிருந்து வரும் நீலநிற கதிர்கள் நல்லதா?, புகை பிடிப்பது கண்களுக்கு பாதிப்பா? என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கத்துடன் பதில் அளிக்கிறது இந்த வீடியோ தொகுப்பு.
வாசகர் கருத்து