மாவட்ட செய்திகள் ஜூன் 05,2023 | 18:45 IST
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வெலக்கல்நாத்தம் பகுதி சந்திரபுரம், மல்லபள்ளி, பஞ்சாயத்து உள்ளிட்ட பகுதிகளில் மின்கட்டணம் வழக்கத்தை விட அதிகமாக வந்தது. பொதுமக்கள் மின்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறினர். அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வெலக்கல்நாத்தம் துணை மின் நிலையம் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் அலட்சியம் செய்தனர். இதனால் ஜெயபுரம் வழியாக வெலக்கல்நாத்தம் செல்லும் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். நாட்றம்பள்ளி போலீசார் மின்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தனர். பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து