மாவட்ட செய்திகள் ஜூன் 05,2023 | 18:47 IST
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பிள்ளையார் குப்பம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக மயானம் இல்லாததால் இறந்தவர் சடலத்தை ஓடைக்கால்வாயில் புதைக்கும் நிலை உள்ளது. மழைக்காலங்களில் ஓடையில் வெள்ளம் வந்தால் புதைப்பதில் சிரமப்படும் நிலை ஏற்படுகிறது. மாவட்ட அதிகாரிகள் மாயனம் ஒதுக்கி தரும்படி கையில் மண்டை ஓட்டுடன் கிராமத்தினர் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து