மாவட்ட செய்திகள் ஜூன் 05,2023 | 20:24 IST
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு துணை கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கைத்தறி நெசவுக்கு ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறி நெசவாளர்கள் நெய்ய கூடாது, 50,000 கைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தினர். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் துணை கலெக்டர் அனாமிகாவிடம் மனு அளித்து கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து