மாவட்ட செய்திகள் ஜூன் 05,2023 | 20:55 IST
திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனுாரில் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி உள்ளது. கல்லுாரி டீனாக முத்துக்கிருஷ்ணன் உள்ளார். இங்கு ஓசூரைச் சேர்ந்த கருணாநிதி மகள் காயத்ரி வயது 21. மூன்றாம் ஆண்டு படித்தார். நேற்று மாலை 5 மணி அளவில் கிணற்றில் இறந்து கிடந்தார். வாணாபுரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக, அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர். உரிய விசாரணை நடத்தி கல்லுாரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர் இறக்கும் முன் மாணவி எழுதிய கடிதத்தை வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து