மாவட்ட செய்திகள் ஜூன் 06,2023 | 11:23 IST
மதுரையில் சுந்தர ராஜா உயர்நிலைப் பள்ளி மற்றும் கள்ளந்திரி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக கள்ளழகர் வாலிபால் கோப்பைக்கான மாவட்ட மகளிர் வாலிபால் போட்டி நடைபெற்றது. போட்டியை கள்ளழகர் கோயில் நிர்வாக அலுவலர் ராமசாமி தொடங்கி வைத்தார். மாவட்ட வாலிபால் கழகத் தலைவர் ராஜேந்திரன், செயலர் சந்திரசேகர், சிவகங்கை மாவட்ட வாலிபால் கழகச் செயலாளர் திருமாறன், மாவட்ட அமைச்சர் கபடி கழகத் துணைத் தலைவர் மனோகர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் சுந்தர ராஜா உயர்நிலைப்பள்ளி முதல் பரிசை வென்றது. ஓ சி பி எம் மகளிர் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் பரிசு, சாம்பியன்ஸ் வாலிபால் அகாடமி மூன்றாம் பரிசு மற்றும் பொன்முடியார் மேல்நிலைப்பள்ளி நான்காம் பரிசை வென்றது. சிறப்பாக விளையாடிய வீராங்கனைகள் மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ், உடற்கல்வி ஆசிரியர் மச்ச ராஜா, ஸ்போர்ட்ஸ் கிளப் முதன்மை பயிற்சியாளர் பிரபு செய்திருந்தார்.
வாசகர் கருத்து