மாவட்ட செய்திகள் ஜூன் 06,2023 | 11:42 IST
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் வரதராஜ பெருமாள் கோயிலில் 5 ம் ஆண்டு வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 1 ம் தேதி தொடங்கி்யது. தினமும் மாலை வரதராஜ பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை வரதராஜபெருமாள் பூதேவி ஸ்ரீதேவிக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பெருமாள் யானை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் மற்றும் ஆழ்வார் பாசுரங்கள் பாடினர்.
வாசகர் கருத்து