மாவட்ட செய்திகள் ஜூன் 06,2023 | 15:47 IST
தஞ்சை மாவட்டம் வல்லம் புதூர் மகாகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பேராசிரியர் புண்ணியமூர்த்தி. இவருக்கு 8 வயதில் பெரியநாயகி, 6 வயதில் பிரிதிஷா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர், பெரியநாயகி வல்லம் புதூரில் மூன்றாம் வகுப்பும் பிரதிஷா முதல் வகுப்பும் படித்தனர். புண்ணியமூர்த்தி நேற்று மாலை வல்லம் புதூரில் இருந்து நாட்டாணி செல்லும் ரோட்டில் உள்ள புதுக்குளத்திற்கு இரண்டு குழந்தைகளுடன் குளிக்க சென்றார். குழந்தைகளை குளத்தின் கரையில் உட்கார வைத்துவிட்டு இயற்கை உபாதைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது குழந்தைகளை காணவில்லை. குழந்தைகளின் ஆடைகள் கரையில் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர் பொதுமக்களுடன் குளத்தில் தேடினர். குளத்தின் சேற்றில் சிக்கிய குழந்தைகள் சடலமாக மீட்டனர். வல்லம் போலீசார் விசாரிக்கி்ன்றனர்.
வாசகர் கருத்து