மாவட்ட செய்திகள் ஜூன் 06,2023 | 15:54 IST
தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்டது. ஓட்டல்கள், உணவகங்கள், கடைகளுக்கு செல்லும் மக்களில் பலர் கையில் பணம் கொண்டு செல்வதில்லை. பொருட்களை வாங்கிவிட்டு, செல்போனில் உள்ள பே.டி.எம்., கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலமாக பணத்தை செலுத்துகின்றனர். கோவை நகரில் சில தனியார் டவுன் பஸ்களில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் சரியான சில்லறை கொடுப்பதில்லை. இதனால் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதை தவிர்க்க சில பஸ்களில் 'க்யூஆர்' கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எவ்வளவு டிக்கெட் என்பதை கண்டக்டரிடம் கேட்டு, 'க்யூஆர்' கோடு மூலம் பணத்தை ்னுப்பி பயணத்தை தொடரலாம். கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கிய இத்திட்டம், பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வாசகர் கருத்து