மாவட்ட செய்திகள் ஜூன் 06,2023 | 18:07 IST
கோவை நேரு ஸ்டேடியத்தில், விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், ரூ. 6.55 கோடி மதிப்பில் 'சிந்தடிக் டிராக்'; ரூ. 65.15 கோடி மதிப்பில், விளையாட்டு மைதானம் மராமத்து பணிகள் நடந்து வருகிறது. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பழைய 'சிந்தடிக் டிராக்' ரப்பர் அகற்றப்பட்டு, அதன் கீழ் இருந்த 'தார்' அடுக்கு எடுக்கப்பட்டது. பின்னர், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்தது. இந்த பணி நிறைவடைந்த பின்னர், அதன் மேல், 'சிந்தடிக் டிராக்' அமைப்பதற்கான பணிகள் துவங்கவுள்ளன. இதற்காக இன்று, நேரு 20க்கும் மேற்பட்ட லாரிகளில் 'தார்' உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வாசகர் கருத்து