மாவட்ட செய்திகள் ஜூன் 06,2023 | 18:24 IST
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆணைகட்டி பகுதியில் கொண்டனூர் பழங்குடியின அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஆதி கூட்டமைப்பு மற்றும் சக்தி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சக்தி அறக்கட்டளை நிறுவனர் மிருதுளா தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்க வந்தவர்களை வரவேற்க பள்ளி மாணவர்கள் பறை இசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வாசகர் கருத்து