மாவட்ட செய்திகள் ஜூன் 06,2023 | 18:45 IST
மதுரையில் GHCL அறக்கட்டளை மற்றும் ஃபெட் கிராட் சார்பாக மாணவிகளுக்கான இலவச கோடைகால சுய தொழில் பயிற்சி நிறைவு விழா தோடனேரி கிராமத்தில் நடைபெற்றது. ஒரு மாதம் நடைபெற்ற பயிற்சியில் டைப்ரைட்டிங், ஸ்போக்கன் இங்லீஸ், கம்ப்யூட்டர் பயிற்சி, பிளஸ் 2 க்கு பின் உயர்கல்வி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் நிறைவு விழா ஃபெட் கிராப்ட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமையில் நடைபெற்றது. GHCL நிறுவன துணைப் பொது மேலாளர் அசோக்குமார் மற்றும் GHCL அறக்கட்டளை CSR அலுவலர் அஜித், நேரு யூவ கேந்திரா இணை இயக்குனர் செந்தில்குமார், திறன் மேம்பாட்டு அலுவலக அதிகாரி முருகேசன் பங்கேற்றனர். பயிற்சி முடித்த மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
வாசகர் கருத்து