மாவட்ட செய்திகள் ஜூன் 06,2023 | 00:00 IST
மாநில அளவிலான சைக்கிள் போலோ போட்டியில் பங்கேற்கும் கோவை மாவட்ட அணி வீரர் வீராங்கனைகள் தேர்வு கோவை நாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. தமிழ்நாடு சைக்கிள் போலோ சங்கம் சார்பில் சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான சைக்கிள் போலோ போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் கோவை அணிக்கான தேர்வில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும், தேர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக விளையாடிய 8 பேர் கோவை அணிக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
வாசகர் கருத்து