மாவட்ட செய்திகள் ஜூன் 06,2023 | 00:00 IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவண்டன்பட்டி ரோட்டில் உள்ள மகாலில் திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 24 வயது வெற்றிவேல் என்பவர் பட்டாசு பெட்டியை தலையில் துாக்கி வைத்து ஆட்டம் போட்டார். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக வெற்றிவேல் கைது செய்யப்பட்டார். மதுரை ரோட்டில் பட்டாசு வெடித்த ராமன், பரமன், ராசுக்காளை, பவளக்கொடி ஆகியோர் மீது உசிலம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வாசகர் கருத்து