மாவட்ட செய்திகள் ஜூன் 07,2023 | 12:40 IST
திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் இந்து தர்ம பிரச்சாரம் செய்யும் விதமாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டி வருகிறது. மகராஷ்டிரா மாநிலத்தில் கட்டுவதற்கு மாநில அரசு நவிமும்பை அரபிக் கடலோரத்தில் ₹600 கோடி மதிப்பில் 10 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினர். இந்த இடத்தில் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டனர். மேலும் கோயில் கட்ட முழு நிதி உதவி செய்யும் ரேமண்ட்ஸ் குழும தலைவர் கெளதம் சிங்கானியா, அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, செயல் அதிகாரி தர்மரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். திருமலையில் ஏழுமலையான் கோயில் எவ்வாறு உள்ளதோ அதேபோன்று வடிவமைப்பில் கோயில் கட்டப்பட்டு 2 ஆண்டுகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கபடவுள்ளதாக தெரிவித்தனர்.
வாசகர் கருத்து