மாவட்ட செய்திகள் ஜூன் 07,2023 | 13:10 IST
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் பழமையான காளத்தீஸ்வரர் கோயில் உள்ளது. கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கியது. பிரவேச நிகழ்ச்சியுடன் பூஜைகள் நடைபெற்றன. இன்று அதிகாலை 6 மணியளவில் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடனது. கோயிலை வலம் வந்து காளத்தீஸ்வரர் ஞானாம்பிகை அம்பாள் கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. முன்னாள் நீதிபதிகள் சுதாகர், சத்தியநாராயணன், பாரதிதாசன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய டி.ஜி.பி விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து