மாவட்ட செய்திகள் ஜூன் 07,2023 | 14:16 IST
திருச்சி அல்லித்துறைசெல்வ மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா 14 ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கோயிலின் பழைய தேருக்கு பதிதாக 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செய்யும் பணிகள் நடைபெற்றது. கடந்த 1 ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது நேற்று படுகளம் காணும் நிகழ்ச்சி, மாரியம்மன் குதிரை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி, காத்தான் கழுவேற்றம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. அம்மன் புதிய தேரில் எழுந்தருளினார். சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என பக்தி கோஷமுழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம் மற்றும் அழகு குத்தி தீமிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
வாசகர் கருத்து