மாவட்ட செய்திகள் ஜூன் 07,2023 | 00:00 IST
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் ரம்யா வயது 32. அவர் தனது குழந்தைகள் விக்னேஷ், நேந்திரா மற்றும் உறவினர்களுடன் மேல்மலையனுார் கோயிலுக்கு சென்றார். சாமி கும்பிட்டுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சென்னை ஏர்போர்ட் அருகே வந்தபோது துாக்க கலக்கத்தில் இருந்த ரம்யா தவறி கீழே விழுந்தார். அவர் மீது ஆட்டோவின் பின் சக்கரம் ஏறியது. பலத்த காயம் அடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே இறந்தார். பரங்கிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து