மாவட்ட செய்திகள் ஜூன் 07,2023 | 14:48 IST
திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் 350க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. அதே பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் சப்ளை ஆகிறது. செவ்வாய்க்கிழமை பெய்த மழையில் திடீரென டிரான்ஸ்பார்மர் பழுதானது. தொழிற்சாலை மற்றும் சுற்றுப்பகுதி குடியிருப்புகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. செவ்வாய் மாலை 3 மணிக்கு பிறகு மின்சாரம் வரவில்லை. இயல்பு நிலை திரும்ப 3 நாட்கள் ஆகும் என்று மின்வாரியம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காக்களூர் மின்வாரிய அலுவலகத்தை தொழிற்சாலை நிர்வாகத்தினர், ஊழியர்கள் முற்றுகையிட்டனர். நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் 6000 தொழிலாளர்களின் வருமானம் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினர். உடனே மாற்று ஏற்பாடு செய்து தருவதாக மின்வாரிய அதிகாரிகள் சமரசம் செய்தனர். ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
வாசகர் கருத்து