மாவட்ட செய்திகள் ஜூன் 07,2023 | 00:00 IST
தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுற்றுலா தலமான சுருளி அருவியில் அரிசிக்கொம்பன் யானை நடமாட்டத்தால் கடந்த 10 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இங்கு குளிக்க கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குளிக்க தடையால் டுரீஸ்டுகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நேற்று முன்தினம் அரிசிக் கொம்பன் யானை பிடிபட்டதால் இன்று முதல் சுருளி அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை வனத்துறை நீக்கியது. சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆனந்த குளியல் போட்டனர்.
வாசகர் கருத்து