மாவட்ட செய்திகள் ஜூன் 07,2023 | 00:00 IST
புதுக்கோட்டை கீழமுத்துக்காடு சாஸ்தார் அய்யனார் பூரண புஷ்காம்பிகா அம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த 29 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரில் சாஸ்தார் அய்யனார் பூரண புஷ்காம்பிகா அம்மனுடன் எழுந்தருளினார். பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வாசகர் கருத்து