மாவட்ட செய்திகள் ஜூன் 07,2023 | 00:00 IST
சென்னை கூடுவாஞ்சேரி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் விஜயலட்சுமி. சில நாட்களுக்கு முன்பு, அதே ஸ்டேஷனை சேர்ந்த 3 பெண் கான்ஸ்டபிளுடன் இரவு ரோந்து சென்றார். படப்பையில் உள்ள ஒரு கடையில் ஜூஸ், பிரட் ஆம்லெட் சாப்பிட்டனர். போகும் போது வாட்டர் பாட்டிலும் கையில் கொஞ்சம் கமரக்கட்டு மிட்டாய்களையும் அள்ளினர். பணம் கொடுக்காமல் கிளம்பினர். அவர்களை நிறுத்தி ஊழியர், 'சாப்பிட்டதற்கு பணம் தாருங்கள்'என்று கேட்டார். breath இன்ஸ்பெக்டருக்கு கோபம் வந்தது. கடை ஓனர் ஷாஜகானுக்கு போன் போட்டு கொடுக்க சொல்லி பேசினார். பணம் கேட்டால் கடை உரிமத்தை ரத்து செய்ய ஏற்பாடு பண்ண வேண்டி வரும் என்று மிரட்டினார். இந்த காட்சி ஆடியோவுடன் சிசிடிவி கேமராவில் பதிவானது. மறுநாள் இந்த ஆதாரத்தை எடுத்துக்கொண்டு மணிமங்கலம் போலீசில் உரிமையாளர் புகார் செய்தார். போலீஸ் விசாரணை துவங்கியது. breath இதற்கிடையே இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி உட்பட 4 பேரையும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்தார்.
வாசகர் கருத்து