பொது ஜூன் 07,2023 | 16:01 IST
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை காளத்தீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. கோயிலை வலம் வந்து ஞானாம்பிகை காளத்தீஸ்வரர் கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. முன்னாள் நீதிபதிகள் சுதாகர், சத்தியநாராயணன், பாரதிதாசன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய டிஜபி விஸ்வநாதன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து