Advertisement

வேலாங்குளம் நாராயணர் பெருமாள் கோயில் மகா கும்பாபிேஷகம்

மாவட்ட செய்திகள் ஜூன் 07,2023 | 00:00 IST

Share

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வேலூர் அருகே உள்ள வேலாங்குளம் நாராயணர் பெருமாள் கோயில் 13 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சிதிலமடைந்து கிடந்த கோயிலில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பணிகள் நடைபெற்றன. தற்போது பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இன்று காலை யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்களை அர்ச்சகர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து கோபுர விமானங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிேஷகம் கோலாகலமாக நடைபெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X