பொது ஜூன் 07,2023 | 17:56 IST
மதுரை திருமங்கலம் கூடகோயில் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயி. வயது 98. 6 மகன்கள், 3 மகள்களை பெற்ற இந்த பாட்டிக்கு பேரன் வழி மகன் வரை இப்போது வாரிசுகள் உள்ளனர். அதே ஊரில் இவரது உடன் பிறந்த அக்கா கருப்பாயி பாட்டியும் வசிக்கிறார். அவருக்கு வயது 105. அக்காவுடன் சேர்ந்து வேலாயி பாட்டி தனது 98வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். குடும்பத்தினர், உறவினர்கள் பாட்டிகளிடம் ஆசி பெற்றனர்.
வாசகர் கருத்து