மாவட்ட செய்திகள் ஜூன் 07,2023 | 19:02 IST
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது, வயது 43. இவர் சிங்கப்பூர் தனியார் நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளாக வேலை பார்த்தார். இவர் கடந்த ஆறு மாதம் முன்பு சிங்கப்பூரில் இருந்த போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு நிதி உதவி அளித்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிங்கப்பூர் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து சாகுல் ஹமீதை பணியில் இருந்து விடுவித்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். காரைக்குடிக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் பத்து பேர் இரண்டு குழுக்களாக பிரிந்து சாகுல் ஹமீது மற்றும் செஞ்சை பள்ளிவாசல் அருகே வாடகை வீட்டில் வசிக்கும் சாகுல் ஹமீது மாமனார் முகமது அலி ஜின்னா, வயது 75, ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். குடும்ப உறுப்பினர்களிடம் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. சோதனை முடிந்து சில ஆவணங்களை கைப்பற்றினர். முகமது அலி ஜின்னாவுக்கு மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நாளை நேரில் ஆஜராக சம்மன் வழங்கினர். சாகுல் ஹமீது வீட்டில் நடந்த சோதனையில் அவரது செல்போன் மற்றும் சில பண பரிமாற்ற ஆவணங்கள் சிக்கின. அவற்றை அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர். மேல் விசாரணைக்காக சாகுல் ஹமீதை மதுரைக்கு அழைத்து சென்றனர். தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு நிதி உதவி அளித்த சாகுல் ஹமீது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து