பொது ஜூன் 07,2023 | 19:43 IST
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், வயது 73. மனைவி பரமேஸ்வரி, மகன்கள் பிரபு, மணிகண்டனுடன் காரில் மதுரை கிளம்பினார். மூத்த மகன் பிரபு காரை ஓட்டினார். காந்தி கிராமம் அடுத்த அம்பாத்துறை அருகே வந்த போது சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த கார் அப்பளம் போல் நொறுங்கியது. பரமேஸ்வரி ஸ்பாட்டிலேயே இறந்தார். பாலசுப்ரமணியன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பிரபு, மணிகண்டன் இருவரும் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது. அம்பாத்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து