மாவட்ட செய்திகள் ஜூன் 07,2023 | 20:40 IST
சேலம் சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் குணசேகரன் (55). ஹோட்டல் ஊழியர். கலெக்டர் ஆபீசிக்கு மனு அளிக்க வந்தார். புதிய பேருந்து நிலையத்தில் இருக்கக்கூடிய முரளி 45 என்பவர் அறிமுகம் ஆகினார். திமுக மாவட்ட அவை தலைவர் சுபாஷ்-ன் 65 மகன் சேலம் மாநகராட்சி கூடுதல் சட்ட ஆலோசகர் சந்திரசேகரை 45 அறிமுகம் செய்து வைத்தார். சேலம் ஜிஹெச்ல் ஆவின் பாலகம் அமைத்து தருவதாக கூறி கடந்த ஜனவரி மாதம் ₹ 5 லட்சம் பெற்றுக் கொண்டார். ஆவின் பாலகம் அமைத்து தரவில்லை. வேறு ஒருவர் நடத்தி வருகிறார். இது குறித்து கேட்டதற்கு ரவுடிகளை வைத்தும் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்தார். அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என வேதனையுடன் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகம் திமுக அவைத்தலைவர் மகன் சந்திரசேகரிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் இல்லை என்றால் 11ம் தேதி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கார் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார். திமுக கட்சியில் இருக்கும் எனக்கே இந்த நிலைனா பாமர மக்களுக்கு என்ன நிலைமை ஏற்படும் வேதனையாக உள்ளது. திமுக என்றாலே ரவுடிகளின் கூட்டாரமாக உள்ளதாகவும் தெரிவித்தார்
வாசகர் கருத்து