பொது ஜூன் 07,2023 | 21:08 IST
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்தவர் சாகுல் ஹமீது, வயது 43. சிங்கப்பூர் தனியார் நிறுவனத்தில் 20 ஆண்டுகளாக வேலை செய்தார். அங்கிருந்து இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு நிதி உதவி அளித்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரித்த சிங்கப்பூர் போலீசார் சாகுல் ஹமீதை பணியில் இருந்து விடுவித்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். தமிழகத்தில் சாகுல் ஹமீது உறவினர்கள் வீடுகளில் அமலாக்கதுறை விசாரணை நடக்கிறது. காரைக்குடி வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சாகுல் ஹமீது வீட்டிலும், செஞ்சை பள்ளிவாசல் பகுதியில் வசிக்கும் அவரது மாமனார் முகமது அலி ஜின்னா வீட்டிலும் சோதனை நடத்தினர். குடும்ப உறுப்பினர்களிடம் 7 மணி நேரம் விசாரணை நடந்தது. சோதனை முடிவில் சில ஆவணங்களை கைப்பற்றினர். முகமது அலி ஜின்னாவுக்கு மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நாளை நேரில் ஆஜராக சம்மன் வழங்கினர்.
வாசகர் கருத்து