மாவட்ட செய்திகள் ஜூன் 07,2023 | 22:45 IST
இன்றைய இளைய தலைமுறையினர் படிப்பதை விட பணி செய்வதைவிட அதிகம் பார்ப்பது இணைய தளம் தான். ஆனால் இளைய தலைமுறையினர் முதல் நடுத்தர வயதினர் வரை வயது வித்தியாசமில்லாமல் சாதாரண, அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளுக்கு கூட தமிழில் அர்த்தம் தெரியாமல் உள்ளனர். இதற்கு காரணம் தமிழில் படிக்கும் மற்றும் எழுதி பார்க்கும் பழக்கம் இல்லாதது தான். இக்கால மாணவர்களுக்கு செய்தித்தாளை படிக்கும்பழக்கமும் குறைந்து விட்டது தான். அவர்கள் தமிழ் அர்த்தம் தெரியாமல் திணறுவதை இந்த வீடியோ விளக்குகிறது. தமிழ் அர்த்தங்கள் Watch - கடிகாரம் Hi - வணக்கம் Selfie - சுயபடம் YouTube - வலையொளி Computer - கணினி Lunch box - மதிய உணவு பெட்டி Cheque - காசோலை Visiting card - சந்திப்பு அட்டை Shoe - காலணி Generation - தலைமுறை
வாசகர் கருத்து