பொது ஜூன் 07,2023 | 23:50 IST
செங்கல்பட்டு மாவட்டம் தையூர் கோமா நகரில் 11 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இதில் 7 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து சிலர் பட்டா போட முயன்றனர். அப்பகுதி இளைஞர்கள் இடத்தை மீட்குமாறு தையூர் விஏஓ செண்பகவள்ளியிடம் 4ம் தேதி புகார் அளித்தனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் புகார் அளித்தவர்களில் ஒருவரான சதீஷ் விஏஓ அலுவலகம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விஏஓ செண்பகவள்ளியை அலுவலகத்தின் உள்ளேயே வைத்து பூட்டி சென்றார் . கேளம்பாக்கம் போலீசார் பூட்டை உடைத்து விஏஓவை மீட்டனர். பணியில் இருந்த அரசு ஊழியரை ஆபீசுக்குள் வைத்து பூட்டிய சதீஷ்குமாரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து