மாவட்ட செய்திகள் ஜூன் 08,2023 | 12:05 IST
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை 1848ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த மெக் ஐவர் என்பவரால் உருவாக்கப்பட்டது. பல நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மரங்கள் நடவு செய்து 1867ம் ஆண்டு பணிகள் நிறைவு பெற்றது. இவர் 1876ம் ஆண்டு ஜீன் மாதம் 8ம் தேதி இறந்தார்.அவருடைய நினைவு நாளில் ஒவ்வொரு வருடமும் உதகையில் செயின்ட் ஸ்டீபன் ஆலயத்தில் உள்ள அவரது கல்லறையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று அவருடைய 147வது நினைவு தினத்தை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் சிறப்பு பிராத்தனை நடத்தினார்.
வாசகர் கருத்து